/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மரகதபுரத்தில் தி.மு.க., சாதனை விளக்க கூட்டம் மரகதபுரத்தில் தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
மரகதபுரத்தில் தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
மரகதபுரத்தில் தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
மரகதபுரத்தில் தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 02:29 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., கோலியனுார் மத்திய ஒன்றியம் சார்பில், கருணாநிதி பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
மரகதபுரம் ஊராட்சியில் நடந்த பிரசார கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கப்பூர் ராஜா தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர்கள் வழக்கறிஞர் முறுக்கம் முனுசாமி, அஸ்வின்குமார் ஆகியோர் தமிழக அரசின் சாதனை விளக்கி பேசினர்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய அவை தலைவர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர்கள் ஜெயா பன்னீர்செல்வம், பட்டு ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுந்தர், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சொல்லின் செல்வம், தனசேகரன், தேவி ரமேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சபரிராஜன், சபரி மற்றும் மாவட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.