/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க கூட்டம்
ADDED : செப் 21, 2025 11:34 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி திடலில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜனகராஜ் தலைமை தாங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார்.
நிர்வாகிகள் மாரிமுத்து, பிரேமா, சுவைசுரேஷ், சக்கரை, வெற்றிவேல், தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், ராஜா, சந்திரசேகரன், ஜெயமூர்த்தி, முரளி, ராஜி, மைதிலி ராஜேந்திரன், தமிழ்ச்செல்வி பிரபு, சச்சிதானந்தம், கலைச்செல்வி, மீனாட்சி ஜீவா, பொதுக்குழு வாசன், சம்பத், பஞ்சநாதன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி தொடர்பு குழு தலைவர் இளங்கோவன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து, கிளியனுார் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் ஏற்பாட்டின் பேரில், தைலாபுரம் ஊராட்சியில் இருந்து, சதீஷ் தலைமையில் 25 பேர் பா.ம.க., கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.
தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், கருணாநிதி உட்பட சார்பு அணி அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன் நன்றி கூறினார்.