/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி பெயர் மாற்றம் அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி பெயர் மாற்றம்
அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி பெயர் மாற்றம்
அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி பெயர் மாற்றம்
அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி பெயர் மாற்றம்
ADDED : செப் 21, 2025 11:34 PM
விக்கிரவாண்டி: அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் இந்த கல்வியாண்டில் புதியதாக உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது.
இந்நிலையில் தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, அந்த கல்லுாரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி வைக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அரசு செயலாளருக்கு கடந்த 9 ம் தேதி கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து தமிழக அரசு கவர்னர் ஆணைப்படி, 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை கல்லுாரி' என பெயர் மாற்றம் செய்தது. இதற்கான, அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர் வெளியிட்டார்.
இந்த அரசாணையை பெற்ற எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.