/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உர கம்பெனியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை உர கம்பெனியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை
உர கம்பெனியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை
உர கம்பெனியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை
உர கம்பெனியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை
ADDED : மார் 28, 2025 05:06 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 10 ஆண்டுகளாக யூரியா உரம் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த கம்பெனியிலிருந்து வெளி வரக்கூடிய புகை அதிகளவில் பரவி மாமந்துார், சித்தானங்கூர், அரும்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.
இதனால், பல ஆண்டுகளாக உரம் தயாரிக்கும் கம்பெனியை மூடக்கோரி கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் அததிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கம்பெனியை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் இரவு 10:00 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் இரவு 11:00 மணியளவில் கலைந்து சென்றனர்.