/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள்... அமல்; கண்காணிப்பு பணிக்கு பறக்கும் படை துவக்கம்விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள்... அமல்; கண்காணிப்பு பணிக்கு பறக்கும் படை துவக்கம்
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள்... அமல்; கண்காணிப்பு பணிக்கு பறக்கும் படை துவக்கம்
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள்... அமல்; கண்காணிப்பு பணிக்கு பறக்கும் படை துவக்கம்
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள்... அமல்; கண்காணிப்பு பணிக்கு பறக்கும் படை துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 11:50 PM

விழுப்புரம், : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி பரிசு பொருள் விநியோகத்தை தடுக்க பறக்கும்படை கண்காணிப்பு குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் ஜூலை 10ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தல் தேதி அறிவித்த 10ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணைய உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றிடும் விதமாகவும் பறக்கும் படை கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப்பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுத் திடும் வகையில் 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 3 நிலையானகண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து, இந்த கண்காணிப்பு குழு வாகனங்களை, கலெக்டர் பழனி நேற்று பிற்பகல் தொடங்கி வைத்து கூறியதாவது:
இக்குழுவினர், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரியவுள்ளனர். பறக்கும்படையில் ஒரு குழுவில் 1 உயர் அலுவலர், அலுவலர்கள் 2, போலீசார் ஒருவர், ஒரு ஒளிப்பதிவாளர் என பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலையான கண்காணிப்பு குழுவிலும் 1 உயர் அலுவலர், 2 போலீசார், 1 ஒளிப்பதிவாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.மேலும், மாவட்டம் முழுவதும், தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில், அரசு சார்ந்த விளம்பரங்கள், புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள், கொடிகள், பேனர்கள் உள்ளிட்டவைகள் 48 மணி நேரத்திற்குள் முழுவதும் அகற்றும் பணி நடக்கிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். வாக்களார்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் வழங்குவது தொடர்பாக வரும் புகார்கள் மீது, உடனடியாக பறக்கும்படை குழு சென்று ஆய்வு மேற்கொள்ளும்.
ஆய்வின்போது பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவது கண்டறியப்பட்டால், தேர்தல் விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.