ADDED : பிப் 23, 2024 10:21 PM

விழுப்புரம் : பொதுத் தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி, வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் திலீபன், விடுதலைச் செல்வன், மலைச்சாமி, பொன்னிவளவன், தனஞ்செழியன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., சிறப்புரையாற்றினார்.
வி.சி., மேலிட பொறுப்பாளர் குணவழகன், மண்டல துணைச் செயலாளர்கள் இரணியன், எழில்மாறன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், ம.ம.க., மாவட்ட செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பேசினர்.