/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 06:22 AM
விக்கிரவாண்டி, : டிஜிட்டல் கிராப் சர்வே பணியை அச்சுறுத்தி செய்ய முயற்சிக்கும் வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு கேசவன், மணிபாலன் ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர்.
ஆர்பாட்டத்தில் மத்திய அரசு பணியான டிஜிட்டல் கிராப் சர்வேயை அருகிலுள்ள மற்ற மாநிலங்களில் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது போல் தமிழகத்திலும் செயல்படுத்த கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் வட்ட தலைவர்கள் சவுந்தர் ராஜன், லோகநாதன், ராஜா, ராஜேஷ்பாண்டியன், உதயகுமார், சத்திய சுந்தரம், பெண்ணரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.