/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வானுார் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் வானுார் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
வானுார் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
வானுார் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
வானுார் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 16, 2025 01:17 AM

வானுார் : வானுார் மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வரவேற்றார். மத்திய மாவட்ட பொருப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, நான்கு ஆண்டுகள் சாதனை கையேடுகளை பொது மக்களுக்கு வழங்கினார். முன்னதாக வானுாரில் கட்சி அலுவலகம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ, புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் உஷா முரளி, வாசன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, அவைத் தலைவர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் மாயகிருஷ்ணன், நெடுஞ்செழியன், பொருளாளர் மகேஷ், ஒன்றிய துணை செயலாளர்கள் எழிலரசி முத்தமிழ், மாணிக்கம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஞானசேகரன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் சசிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.