ADDED : ஜூன் 16, 2025 01:18 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் பணியாளர்களின் ரத்ததான முகாம் நடந்தது.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விக்கிரவாண்டி உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேயிஸ் லிட் சார்பில் நடந்த ரத்ததான முகாமிற்கு டோல் பிளாசா திட்ட மேலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்தார். சமூக பொறுப்புணர்வு திட்ட மேலாளர் சொர்ணமணி வரவேற்றார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை ரத்த வங்கி தலைவர் டாக்டர் விஜயா தலைமையில் சமூக பணியாளர் அசோக்குமார் மற்றும் குழுவினர் பணியாளர்களிடமிருந்து 30 யூனிட் ரத்த தானம் பெற்றனர்.
நகாய் திட்ட துறை அலுவலர் கார்த்திகேயன், டோல் பிளாசா பி.ஆர்.ஓ., தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் அசோக்குமார், மனோஜ், உள்ளிட்ட பிளாசா ஊழியர்கள் முகாமில் பங்கேற்றனர்.