ADDED : ஜூன் 25, 2025 01:23 AM

விழுப்புரம் : விழுப்புரம் நாராயணா நகர் பகுதியில், சேதமடைந்த பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' சீரமைக்கப்பட்டது.
விழுப்புரம் நாராயணா நகர், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அமைந்துள்ள தெருவில், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. இதற்காக தோண்டிய 'மேல் ேஹால்' சேதமடைந்தது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பள்ளம் மூடப்படாததால், விபத்து அபாயம் உள்ளதாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில், உடனடியாக பள்ளம் சீரமைக்கப்பட்டது.