/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல் கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
ADDED : ஜூன் 25, 2025 02:15 AM

மயிலம் : மயிலம் ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்ல வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் வரவேற்றார். நிகழ்ச்சியில் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 14 கோடியே 52 லட்சம் செலவில் 41 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கி பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில நிர்வாகி சிவா, ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், துணை சேர்மன் புனிதா ராமஜெயம், மாவட்ட பிரதிநிதிகள் சேகர், கண்ணன் விவசாய அணி பாஸ்கர், இளைஞர் அணி சம்சுதீன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பு சேகர், தீவனுார் ஒன்றிய கவுன்சிலர்கள் கிஷோர், பரிதா சம்சுதீன், ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகர், மகாலட்சுமி, சிவக்குமார் கட்சி நிர்வாகிகள் ராஜா, பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.