/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைதுவாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
ADDED : ஜன 06, 2024 04:58 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் பிறந்த நாள் கொண்டாடியவர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த பாபு மகன் நித்திஷ், 22; இவரது நண்பர் நவினுக்கு, கடந்த 4ம் தேதி பிறந்த நாள் கொண்டாடினர்.
இதற்காக, ஊரல்கரைமேடு வாலிபால் கிரவுண்டில், கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது, அதிகம் சத்தம் கேட்டதால் அதன் அருகே குடியிருந்து வரும் தோமாஸ், 48; பிரமோ, 46; கிஷோர், 22; ஆகியோர் வந்து, இங்கு ஏன் சத்தம் போடுகிறீர்கள் என கேட்டனர். இதில் ஏற்பட்ட தகராறில், நித்திஷ் உள்ளிட்டோரை திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நித்திஷ் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, தோமாஸ், பிரேமாவை கைது செய்தனர்.