/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இளம் பெண்ணுக்கு டார்ச்சர்; திண்டிவனத்தில் வாலிபர் கைதுஇளம் பெண்ணுக்கு டார்ச்சர்; திண்டிவனத்தில் வாலிபர் கைது
இளம் பெண்ணுக்கு டார்ச்சர்; திண்டிவனத்தில் வாலிபர் கைது
இளம் பெண்ணுக்கு டார்ச்சர்; திண்டிவனத்தில் வாலிபர் கைது
இளம் பெண்ணுக்கு டார்ச்சர்; திண்டிவனத்தில் வாலிபர் கைது
ADDED : ஜன 05, 2024 12:18 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் இளம்பெண்ணை வழிமறித்து காதலிப்பதாக கூறி, மொபைல் போனை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் விக்னேஷ், 24; இவர், 25 வயது இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 1ம் தேதி வேலைக்குச் சென்ற அந்த பெண்ணிடம் மொபைல் போனை பறித்துச் சென்றார்.
பாதிக்கப்பட்ட பெண், திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.