/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனம் பா.ம.க., வழக்கறிஞர் பாலாஜி இல்ல புதுமனை புகுவிழாதிண்டிவனம் பா.ம.க., வழக்கறிஞர் பாலாஜி இல்ல புதுமனை புகுவிழா
திண்டிவனம் பா.ம.க., வழக்கறிஞர் பாலாஜி இல்ல புதுமனை புகுவிழா
திண்டிவனம் பா.ம.க., வழக்கறிஞர் பாலாஜி இல்ல புதுமனை புகுவிழா
திண்டிவனம் பா.ம.க., வழக்கறிஞர் பாலாஜி இல்ல புதுமனை புகுவிழா
ADDED : பிப் 11, 2024 10:15 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் பா.ம.க., பிரமுகர் வழக்கறிஞர் பாலாஜி இல்ல புதுமனை புகு விழாவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம், வசந்தபுரம், கங்காநகர் பகுதியில், பா.ம.க.,வின் சமூக நீதி பேரவையின் மாநில செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி இல்ல புதுமனை புகு விழா நேற்று நடந்தது.
இதில் பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ்,முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க.,மாநில தலைவருமான அன்புமணி, மேல்மருவத்தார் ஆதிபராசக்தி சித்தர் பீடம் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு, வாழ்த்து தெரிவித்தனர்.
புதுமனை புகு விழாவில் பேராசிரியர் தீரன், பா.ம.க., மாநில சமூக நீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு, விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.,செயலாளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் பாவாடைராயன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எஸ்.சுப்பராயலு, மாவட்ட துணை தலைவர் பொன்மொழி, மாவட்ட துணை செயலாளர்கள் பால்பாண்டியன் ரமேஷ், சலவாதிசேகர், திண்டிவனம் நகர செயலாளர் ராஜேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், கணேஷ்குமார், திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன், பா.ம.க., நிர்வாகிகள் சலாவதி சேகர், கவுன்சிலர் மணிகண்டன், ஏழுமலை, நல்லாவூர் ராஜீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.