/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்
செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்
செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்
செவிலியருக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம்
ADDED : ஜன 05, 2024 10:14 PM

செஞ்சி : ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு மூன்று நாள் கர்ப்பகால பயிற்சி முகாம் நடந்தது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுடன் புதுடில்லியை சேர்ந்த ஜபைக்கோ அமைப்பினர் செவிலியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
இப்பயிற்சி முகாமிற்கு தாய், சேய் நல அலுவலர் அம்பிகா தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யோகாபிரியா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார்.
கல்லூரி தாளாளர் ரங்கபூபதி முகாமை துவக்கி வைத்து, செவிலியர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கினார். ஜபைக்கோ கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆராய்ச்சி அதிகாரி லிடியா, திட்ட அலுவலர்கள் சைலேஷ், சுபா வைஷ்ணவி ஆகியோர் செவிலியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் சத்தியமங்கலம், ஒட்டம்பட்டு, அனந்தபுரம் ஆரம்பசுகாதார நிலைய பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பயிற்சி பெற்றனர். சுகாதார ஆய்வாளர் ஏழுமலை நன்றி கூறினார்.