/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டுகோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு
கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு
கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு
கோவில் உண்டியலில் காணிக்கை திருட்டு
ADDED : பிப் 06, 2024 05:57 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் அடுத்த வடகளவாய் கிராமத்தில் ஸ்ரீகளரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடம்பாக்கம் ராமச்சந்திரன், 63; பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் மற்றும் 3 சுவாமிகளின் கழுத்தில் இருந்த கால் சவரன் மதிப்புள்ள 3 பொட்டுகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.