Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிமென்ட் கடையில் திருட்டு

சிமென்ட் கடையில் திருட்டு

சிமென்ட் கடையில் திருட்டு

சிமென்ட் கடையில் திருட்டு

ADDED : பிப் 25, 2024 05:20 AM


Google News
விழுப்புரம், : விழுப்புரத்தில் சிமென்ட் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் கே.கே.,ரோட்டைச் சேர்ந்தவர் தமிழ்வாணன், 60; இவர், விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை, காந்தி நகர் பகுதியில் சிமென்ட் கடை வைத்துள்ளார். இவர், நேற்று காலை 9:00 மணிக்கு கடையை திறக்கச் சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 1.50 லட்சம் ரூபாய் மற்றும் 1 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

தமிழ்வாணன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us