/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அமைச்சரிடம் அழுதபடி புகார் மனு அளித்த பெண்அமைச்சரிடம் அழுதபடி புகார் மனு அளித்த பெண்
அமைச்சரிடம் அழுதபடி புகார் மனு அளித்த பெண்
அமைச்சரிடம் அழுதபடி புகார் மனு அளித்த பெண்
அமைச்சரிடம் அழுதபடி புகார் மனு அளித்த பெண்
ADDED : ஜன 31, 2024 05:38 AM

விழுப்புரம் : வீட்டுக்கு வந்து மிரட்டுவோர் மீது நடவடக்கை எடுக்க வேண்டுமென, விழுப்புரத்தில் அமைச்சரிடம் மனு அளித்து, அழுத பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த சாலைஅகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 45; இவர், நேற்று பிற்பகல் தனது மகனுடன், ஒரு புகார் மனுவுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் இல்லாததால், அங்கிருந்த அமைச்சர் மஸ்தானிடம் மனு அளித்து, அவர் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது: சாலை அகரத்தில் வசித்து வருகிறேன். ஏற்கனவே எனது மாமனார் பாலகிருஷ்ணனிடம், எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் பணம் கொடுத்ததாகவும், அவர் இறந்துவிட்டதால் எங்களிடம் வந்து அடிக்கடி தகராறு செய்து திட்டி வருகின்றனர். அவர்கள், பணம் கொடுத்தார்களா என்பதும் எங்களுக்கு தெரியாது. வீட்டில் ஆளில்லாத நேரத்தில் வந்து மிரட்டுவதால், மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மனுவை பெற்ற அமைச்சர், அங்கிருந்த போலீசாரிடம் விசாரித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.