ADDED : மே 25, 2025 04:42 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மாயமான தனியார் நிறுவன பெண் செக்யூரிட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த முருகன் மகள் ஈஸ்வரிதேவி, 24; விழுப்புரத்தில் உள்ள தனியார் துணி கடை செக்யூரிட்டி. கடந்த 22ம் தேதி, வழக்கம் போல், வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.