/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு விழுப்புரத்தில் இன்று ஆய்வுசட்டமன்ற மதிப்பீட்டுக்குழு விழுப்புரத்தில் இன்று ஆய்வு
சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு விழுப்புரத்தில் இன்று ஆய்வு
சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு விழுப்புரத்தில் இன்று ஆய்வு
சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு விழுப்புரத்தில் இன்று ஆய்வு
ADDED : ஜன 04, 2024 03:42 AM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இன்று நேரில் ஆய்வு செய்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின், 2023 - 24ம் ஆண்டிற்கான அரசு மதிப்பீட்டுக்குழு நேரில் ஆய்வு செய்கிறது.
இந்த மதிப்பீட்டுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று (ஜன.4) காலை துவங்கி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக, இக்குழுவில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் நேற்று மாலை விழுப்புரம் வந்தனர். கலெக்டர் பழனி தலைமையில், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.