/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு மாதிரி பள்ளியில் பாடப்புத்தகம் வழங்கல் அரசு மாதிரி பள்ளியில் பாடப்புத்தகம் வழங்கல்
அரசு மாதிரி பள்ளியில் பாடப்புத்தகம் வழங்கல்
அரசு மாதிரி பள்ளியில் பாடப்புத்தகம் வழங்கல்
அரசு மாதிரி பள்ளியில் பாடப்புத்தகம் வழங்கல்
ADDED : ஜூன் 03, 2025 12:20 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகம், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் தமிழ்செல்வி பிரபு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகம், நகராட்சி கமிஷனர் வசந்தி முன்னிலை வகித்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவிகளுக்கு பாடபுத்தகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, பொறுப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் புருஷோத்தமன், அன்சார் அலி, புல்லட்மணி, பத்ம நாபன், சாந்தராஜ், வசந்தாஅன்பரசு, நகர இளைஞரணி மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசாருதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா நன்றி கூறினார்.