ADDED : மே 21, 2025 11:21 PM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கோவில் பூட்டை உடைத்து, உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலை, நேற்று வழக்கம்போல் திறந்து பூஜை செய்ய, கோவில் பூசாரி வீரமுத்து சென்றார். அப்போது, கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து துாக்கி சென்றது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.