/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு
விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு
விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு
விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு
ADDED : செப் 09, 2025 11:49 PM
விழுப்புரம்; டாடா ஏஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.
விழுப்புரம் அடுத்த கஞ்சனுாரை சேர்ந்தவர் கதிரவன், 31; இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து கஞ்சனுாருக்கு சென்றார்.
பூத்தமேடு பகுதியில் சென்றபோது எதிரில் திருப்பச்சாவடிமேட்டை சேர்ந்த பச்சையப்பன், 48; என்பவர் ஓட்டிவந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், பச்சையப்பன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.