ADDED : ஜன 31, 2024 05:42 AM

விழுப்புரம்,: விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள, கோடிதெரு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர், கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்ட போலீசார், அந்த நபரை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் வி.மருதுார், கோடி தெருவை சேர்ந்த மணி மகன் அன்பரசு,22; என்பதும், கஞ்சா விற்க வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து அன்பரசுவை கைது செய்ததோடு, அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.