/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தமிழக வெற்றி கழக வாசல் திறப்பு சீனியர் பிரமுகர்களுக்கு அழைப்புதமிழக வெற்றி கழக வாசல் திறப்பு சீனியர் பிரமுகர்களுக்கு அழைப்பு
தமிழக வெற்றி கழக வாசல் திறப்பு சீனியர் பிரமுகர்களுக்கு அழைப்பு
தமிழக வெற்றி கழக வாசல் திறப்பு சீனியர் பிரமுகர்களுக்கு அழைப்பு
தமிழக வெற்றி கழக வாசல் திறப்பு சீனியர் பிரமுகர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 06, 2024 06:14 AM
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு மூத்த அரசியல் பிரமுகர்களை இழுக்கும் முயற்சியில் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் புதுப்புது யுக்திகளால் மக்களின் ஓட்டுகளைக் கவர முயல்வது வழக்கம்.
இது போன்ற பரபரப்பான சூழலில் அரசியல் கட்சிகள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி, கட்சியின் பெயரை 'தமிழக வெற்றி கழகம்' என அறிவித்துள்ளார். வருகின்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் வரும் 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதை முன் வைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தற்போதே ஆயத்தமாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, மக்கள் இயக்க நிர்வாகிகள், தங்களின் கட்சிக்கு சீனியாரிட்டி வகையில் அரசியல் ஆலோசனை கூறுவதற்கு முக்கிய பிரமுகர்கள் தேவையாக உள்ளனர்.
இதையறிந்த அவர்கள், முதல் கட்டமாக, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - த.வா.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டுள்ள மூத்த நிர்வாகிகளை தங்களின் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி இழுக்க துவங்கியுள்ளனர்.
இவர்களின் அனுபவம் சார்ந்த அரசியல் ஆலோசனைகளைப் பெற்று, தங்கள் கட்சியை மக்கள் மத்தியில் வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.