/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு துவக்க விழாதமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு துவக்க விழா
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு துவக்க விழா
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு துவக்க விழா
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு துவக்க விழா
ADDED : பிப் 11, 2024 10:16 PM

விழுப்புரம்: தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு துவக்க விழா விழுப்புரத்தில் நடந்தது.
நகராட்சி உயர்நிலை பள்ளியில் நடந்த 2 நாள் மாநாட்டிற்கு வரவேற்பு குழுத் தலைவர் எமர்சன் ராபின் தலைமை தாங்கினார்.
மாவட்ட கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் முன்னிலை வகித்தார். தலைவர் சேகர் வரவேற்றார். செயலாளர் பாலமுருகன் மாநாட்டு அறிமுகவுரையாற்றினார்.
மாநில கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் மாதவன் துவக்கவுரையாற்றினார்.
தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பாராட்டி பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் வாழ்த்திப் பேசினார்.
அரசு உதவி பெறும் ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் கிருஷ்ணாபாய், முன்னாள் தலைவர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, உபக்குழு அறிக்கை தொடர்பாக கல்வி உபக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவன் சொற்பொழிவாற்றினார்.
சமூக மாற்றத்திற்கான கல்வி பற்றி எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், உபக்குழு அறிக்கை மற்றும் தலைப்பு விவாதம் குறித்து நிர்வாகிகள் பரமேஸ்வரி, தீனதயாளன், செல்லத்துரை, மலர்செல்வி கலந்துரையாடினர்.
மாவட்ட சிறப்பு திட்டங்கள் குறித்து கல்வி உபக்குழு சுந்தர் கருத்துரை வழங்கினார். பொருளாளர் சுகதேவ் நன்றி கூறினார்.