/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்
ADDED : பிப் 06, 2024 04:53 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'கல்வித்துறை மூலம் செயல்படும் குழந்தைகளுக்கான விடுதிகளில் பதிவு பெறாமல் செயல்படும் மாணவ, மாணவிகளின் விடுதிகள் குறித்த விபரம். குழந்தை தொழிலாளர் உள்ளனரா என ஆய்வு செய்து மீட்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கை எடுக்க குழந்தைகளின் பெயர் பட்டியலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அளிக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இளம் சிறார் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டுமென முதன்மை நடுவர் மற்றும் இளைஞர் நீதிக்குழுமம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் ஒரு நாள் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க குற்ற வழக்குகளை விரைவாக பதிய வேண்டும். குற்ற பத்திரிகையை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும்.
குற்றங்கள் நடக்காமல் இருக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், கூடுதல் குற்றவியல் துறை இயக்குனர் கலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட பலர் பங்கேற்றனர்.