/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர் யூனியன் பதவியேற்பு ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர் யூனியன் பதவியேற்பு
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர் யூனியன் பதவியேற்பு
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர் யூனியன் பதவியேற்பு
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் மாணவர் யூனியன் பதவியேற்பு
ADDED : ஜூன் 15, 2025 11:55 PM

விழுப்புரம் : விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர் யூனியன் தேர்தல் நடந்தது.
பள்ளி தலைமை மாணவன், மாணவி மற்றும் விளையாட்டுத் தலைமை மாணவன், மாணவி, குழுத் தலைமை மாணவன், மாணவி மற்றும் கலாச்சார விழாக்களின் தலைமை மாணவன், மாணவி தேர்ந்தெடுக்க ஏழாம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வகுப்பு வரை தேர்தல் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஓட்டுச்சாவடி அறைகள் நிறுவப்பட்டு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓட்டு அளித்தனர். இதில், அதிக ஓட்டுகள் பெற்ற 14 மாணவர்கள், தலைமை மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பதவியேற்பு விழாவிற்கு பள்ளி செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, பள்ளி தாளாளர் பிரகாஷ், நிர்வாக இயக்குனர்கள், முதல்வர்கள், மையக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.