/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; ஒன்றிய சேர்மனிடம் கோரிக்கை கடிதம் அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; ஒன்றிய சேர்மனிடம் கோரிக்கை கடிதம்
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; ஒன்றிய சேர்மனிடம் கோரிக்கை கடிதம்
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; ஒன்றிய சேர்மனிடம் கோரிக்கை கடிதம்
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; ஒன்றிய சேர்மனிடம் கோரிக்கை கடிதம்
ADDED : ஜூன் 05, 2025 07:02 AM

திண்டிவனம்; திண்டிவனம், மரக்காணம் அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஒன்றிய சேர்மனிடம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.
திண்டிவனம் அடுத்த மொளசூர் மற்றும் மரக்காணம் ஆலத்துார் கூட்ரோட்டில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து, அவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் லாவண்யா, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி பயிற்சி அலுவலர் பிரேமலதா கொண்ட குழுவினர், திண்டிவனம் பகுதியில் உள்ள கல்வி நிலையங்கள், பி.டி.ஓ., அலுவலகங்களுக்கு சென்று, ஐ.டி.ஐ.,யில் உள்ள தொழிற்பிரிவுகள், அரசின் சலுகைகள் குறித்து எடுத்துரைத்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கத்தை நேரில் சந்தித்து மாணவர் சேர்க்கைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் கொடுத்தனர்.