/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுஅமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு
ADDED : ஜன 03, 2024 12:09 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீர தியாகி விஸ்வநாததாஸ் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க 2ம் ஆண்டு விழா மற்றும் மாவட்ட, மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், ராஜிவ், கலைவாணன், ஜெயமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாநில பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு செயலாளர் செல்லதுரை சிறப்புரையாற்றினர்.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் வாழ்த்திப் பேசினார். சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மருத்துவ சமுதாயத்தை இழிவாக பேசி பேட்டி கொடுத்த தயாநிதிமாறன் எம்.பி.,யை கண்டிப்பது. மருத்துவ சமுதாயத்தினர் வைத்துள்ள சலுான் கடைகளுக்கென உறுப்பினர்களை சேர்ப்பது.
கடைகள் வைப்பதற்கு, வங்கிகளில் பிணையின்றி 10 லட்சம் ரூபாய் அளவில் தொழில் கடன் வழங்க வேண்டும். மருத்துவ சமுகத்தினருக்கு மக்கள் விகிதாச்சார அடிப்படையில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.