/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 12, 2025 04:05 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு :
மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த ஜூலை 15ம் தேதி துவங்கியது. இதில், 15 துறைகள் சார்பில் பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்குகின்றனர்.
இந்த முகாமில் மருத்துவ காப்பீடு, ஆதார், இ-சேவைகள் வழங்கப்படுகிறது. இதில் மகளிர் உரிமை தொகை கோருவோர் நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களோடு பதிவு செய்யலாம்.
இந்த முகாம், இன்று செஞ்சி பேரூராட்சி, மரக்காணம், விக்கிரவாண்டி, காணை, கோலியனுார், முகையூர் ஒன்றங்களில் நடக்கிறது. செஞ்சி பேரூராட்சியில் வள்ளி அண்ணாமலை மண்டபத்தில் வார்டு 10 முதல் 18 வரை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம்.
மரக்காணம் ஒன்றியம், ஓமந்துார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் நடக்கும் முகாமில், வேங்கை, ஓமந்துார், கீழ்சித்தாமூர், அன்னம்புத்துார் ஊராட்சி மக்கள் மனுக்களை அளிக்கலாம்.
விக்கிரவாண்டி ஒன்றியம், அசோகபுரி அன்னை ரங்கநாயகி மண்டபத்தில் நடக் கும் முகாமில், கொட்டியாம் பூண்டி, உலகலாம்பூண்டி, பொன்னங்குப்பம் ஊராட்சி மக்களும், காணை ஒன்றியம், பனமலைபேட்டை மகாலட்சுமி எம்.ஆர்.எஸ்., மண்டபத்தில் நடக்கும் முகாமில், அனுமந்தபுரம், சென்னப்பநாயக்கன் பாளையம், திருக்குணம், பனமலை, வெள்ளையாம்பட்டு ஊராட்சி மக்களும் மனுக்களை வழங்கலாம்.
கோலியனுார் ஒன்றியம், கொண்டங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் நடக்கும் முகாமில், கொண்டங்கி ஊராட்சி மக்களும், முகையூர் ஒன்றியம், எஸ்.கொல்லுார் ஆர்.ஆர்., மண்டபத்தில் நடக்கும் முகாமில், எஸ்.கொல்லுார், நெற்குணம், ஏமப்பேர், அருமலை, வெல்லம்புத்துார் ஆகிய ஊராட்சி மக்கள் மனுக்களை அளிக்கலாம்.