/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுவர் பூங்கா மேம்பாடு கலெக்டர் ஆய்வு சிறுவர் பூங்கா மேம்பாடு கலெக்டர் ஆய்வு
சிறுவர் பூங்கா மேம்பாடு கலெக்டர் ஆய்வு
சிறுவர் பூங்கா மேம்பாடு கலெக்டர் ஆய்வு
சிறுவர் பூங்கா மேம்பாடு கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 12, 2025 04:05 AM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், நடைபாதையோடு கூடிய சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மக்கள் நடைபயிற்சி செல்வதோடு, சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.
இங்கு அரசு போட்டி தேர்வுக்கு தயாராவோரும் வந்து பயிலும் வகையில், பொ து நிதி திட்டத்தின் கீழ், தலா ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் நான்கு ஓட்டு குடில் அமைக்கப்பட்டு வரும் பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சிறுவர் பூங்காவில் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டியை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி செய்ய இறகு பந்து மைதானம், கிரிக்கெட், வாலிபால், மகளிருக்கு உடற்பயிற்கூடம் அமைப் பதற்கு இடம் தேர்வு செய்யவும் ஆய்வு செய்யப்பட்டது.
சிறுவர்கள் விளையாட பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்பாட்டை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆணையர் வசந்தி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அன்பழகன், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.