/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழாராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஜன 01, 2024 12:23 AM
செஞ்சி : செஞ்சி அடுத்த களையூர், நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் 11ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
விழாவில், மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், வாலிபால், கால்பந்து, கபடி மற்றும் தடகள போட்டி நடந்தது. கல்லுாரி சேர்மன் பாபு தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். செயலாளர் அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் சுப்பராயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கும், மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார்.
அறக்கட்டளை இயக்குனர்கள் அங்கவை பாபு, ராஜாராம், அரவிந்த், வெங்கடசுப்ரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர்கள் முரளி, அருள்முருகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.