Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே ஏற்பாடு

தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே ஏற்பாடு

தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே ஏற்பாடு

தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே ஏற்பாடு

ADDED : ஜன 25, 2024 06:27 AM


Google News
விழுப்புரம், : வடலுார் தைப்பூசத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக இன்று முதல் 27ம் தேதிவரை விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பி.ஆர்.ஓ., வினோத் செய்திகுறிப்பு:

வடலுார் தைப்பூச விழாவிற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் இன்று 25ம் தேதி முதல் 27ம் தேதிவரை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9:10 மணிக்கு விழுப்புரத்தில இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06145) காலை 11:15 மணிக்கு கடலுார் துறைமுகம் சென்றடையும். இந்த ரயில், விருத்தாசலம், நெய்வேலி, வடலுார் , குறிஞ்சிப்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோன்று மாலை 3:00 மணிக்கு கடலுார் துறைமுகத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06132) மாலை 5:10 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. இந்த ரயில், குறிஞ்சிப்பாடி, வடலுார், நெய்வேலி, ஊத்தங்கால், விருத்தாசலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us