கண்டாச்சிபுரத்தில் எஸ்.பி., ஆய்வு
கண்டாச்சிபுரத்தில் எஸ்.பி., ஆய்வு
கண்டாச்சிபுரத்தில் எஸ்.பி., ஆய்வு
ADDED : செப் 21, 2025 04:55 AM
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஆண்டு ஆய்வு நடைபெற்றது. இதில், எஸ்.பி., சரவணன் போலீஸ் நிலையப் பதிவேடுகள், வழக்கு நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை செய்தார்.
இதைத்தொடர்ந்து நிலுவை வழக்குகள் மற்றும் குற்ற நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் போலீசாரின் பாதுகாப்புக்கவசங்கள், சீருடை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் நிலுவை வழக்குகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில், ஏ.எஸ்.பி., ரவிந்திரகுமார் குப்தா, எஸ்.ஐ காத்தமுத்து உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.