ADDED : ஜன 07, 2024 05:20 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெளியூர் சென்ற மகனைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் அஜித்குமார், 25; இவர், அடிக்கடி வெளியூர் சென்று தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி பணிக்காக வெளியூர் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.