/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு கல்லுாரிகளில் காலி பணியிடம் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்அரசு கல்லுாரிகளில் காலி பணியிடம் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்
அரசு கல்லுாரிகளில் காலி பணியிடம் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்
அரசு கல்லுாரிகளில் காலி பணியிடம் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்
அரசு கல்லுாரிகளில் காலி பணியிடம் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்
ADDED : ஜன 05, 2024 12:19 AM

விழுப்புரம் : அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள 4000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி விழுப்புரத்தில் அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில், 20 புதிய அரசு கலை அறிவியல் கல்லுாரிகளை அரசு தோற்றுவித்து, மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அனால், தமிழகத்தில் 170 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், 4000 பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஓராண்டாகியும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அனைத்து அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளது.
விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு, அரசு கல்லுாரி ஆசிரியர் கழக விழுப்புரம் கிளைத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மண்டல செயலாளர் தண்டாயுதபாணி, கிளைச் செயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் அசோகன், கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விஜயரங்கம் தொடங்கி வைத்தனர்.
கல்லுாரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்களிடம் கையெழுத்து பெற்று அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.