/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு பதவி மதிப்பதில்லை என சீனியர்கள் 'அப்செட்'அ.தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு பதவி மதிப்பதில்லை என சீனியர்கள் 'அப்செட்'
அ.தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு பதவி மதிப்பதில்லை என சீனியர்கள் 'அப்செட்'
அ.தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு பதவி மதிப்பதில்லை என சீனியர்கள் 'அப்செட்'
அ.தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு பதவி மதிப்பதில்லை என சீனியர்கள் 'அப்செட்'
ADDED : பிப் 06, 2024 06:12 AM
லோக்சபா தேர்தலையொட்டி, விழுப்புரம் நகரில் அ.தி.மு.க.,வில் புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கிய நிலையில் அவர்கள் சீனியர்களை மதிக்காததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் லோக்சபா தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளோடு தொகுதி பங்கீடுகளுக்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.,வில் சமீபத்தில் பழைய நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டதோடு, புதிய நிர்வாகிகளுக்கும் பொறுப்புகள் வழங்கி நியமிக்கப்பட்டனர்.
இதில், விழுப்புரம் நகரில் உள்ள வார்டுகளில் கட்சிக்காக உழைத்த சில சீனியர் பிரமுகர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இதனால், மூத்த நிர்வாகிகளை, வார்டுகளில் நடக்கும் பூத் தொடர்பான முக்கிய கூட்டங்களுக்கு கூட புதிய நிர்வாகிகள் அழைக்காததால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நகர வார்டுகளில் அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, லோக்சபா தேர்தலிலும் கூட கூடுதலான ஓட்டு வித்தியாசத்தை காட்டியுள்ளனர். இருந்த போதிலும், அவர்கள் இந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., தலைமை தங்களை தேர்தல் பணியாற்ற அழைக்காமல் ஓரங்கட்டியுள்ளதால் 'அப்செட்' ஆகியுள்ளனர்.