ADDED : ஜன 07, 2024 05:27 AM

கண்டமங்கலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட 15வது மாவட்ட மாநாடு கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோவன் இரண்டு ஆண்டுகள் இயக்கப் பணிகள் குறித்த செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநாட்டில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக சேகர், செயலாளராக பாலமுருகன், பொருளாளராக சுகதேவ் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக அய்யனார், இளங்கோவன், வாசு கார்த்திக், சக்திவேல், தண்டபாணி, தமிழ்ச்செல்வி, இணைச் செயலாளர்களாக அருள், வெங்கடேசன், ராஜ்குமார், முருகன், சங்கரநாராயணன், செந்வந்தி தேர்ந்தெடுக்கப்பட்னர்.
புதிய நிர்வாகிகளிடம் 43 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, மாவட்டத்திற்கான நவீன தொலைநோக்கியை செஞ்சி ஆல்பர்ட் நினைவு தொலை நோக்கியாக மாவட்ட செயலாளர் இளங்கோவன் புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.