ADDED : ஜன 13, 2024 04:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் எஸ்.பி.,யாக டாக்டர் தீபக் சிவாச் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் எஸ்.பி.,யாக பணிபுரிந்த சசாங்சாய், சென்னை 'கியூ' பிராஞ்ச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, பரங்கிமலை துணை கமிஷனராக இருந்த தீபக் சிவாச் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார்.
இவர் நேற்று மாலை எஸ்.பி., அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 2018ம் ஆண்டு ஐ.பி.எஸ்., முடித்து, தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கூடுதல் எஸ்.பி., யாக முதலில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, இடம் மாறுதல் பெற்று ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டன்ட்டாக பணியாற்றினார்.
பின், பரங்கிமலை துணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர், விழுப்புரம் மாவட்ட 23வது எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.
இவர், எம்.பி.பி.எஸ்., முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.