/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க., அழைப்பு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க., அழைப்பு
தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க., அழைப்பு
தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க., அழைப்பு
தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க., அழைப்பு
ADDED : செப் 21, 2025 04:54 AM

விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தில், 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை :
திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி, முகையூர் வடக்கு ஒன்றியம், கண்டாச்சிபுரம் பஸ் நிலையம் அருகே 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம், இன்று மாலை 4:00 மணிக்கு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடக்கிறது. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார்.
முகையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்கிறார். இதில், எம்.எல்.ஏ., பொன்முடி, மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், தலைமை தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தலைமை வழக்கறிஞர் சுவை சுரேஷ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர்கள் முருகன், கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.