ADDED : ஜன 28, 2024 07:02 AM

வானூர், : கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் நாகமணி வரவேற்றார். கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு முன்னிலை வகித்தார்.விழாவில் எம்.எல்.ஏ., சக்ரபாணி பங்கேற்று, தேசிய கொடியேற்றி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழாவில், கடந்த அரையாண்டு தேர்வில் வகுப்பு வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வானூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், தாசில்தார் நாராயணமூர்த்தி தேசிய கொடியேற்றி வைத்தார். இதில், துணை தாசில்தார் முருகதாஸ், வி.ஏ.ஓ.,க்கள் ரங்கநாதன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.