ப.வில்லியனூரில் ரேஷன் கடை திறப்பு
ப.வில்லியனூரில் ரேஷன் கடை திறப்பு
ப.வில்லியனூரில் ரேஷன் கடை திறப்பு
ADDED : மே 11, 2025 01:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ப.வில்லியனூரில் ரேஷன் கடையை எம்.எல்.ஏ., லட்சுமணன் திறந்து வைத்தார்.
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சி ப.வில்வியனூரில், விழுப்புரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
லட்சுமணன் எம்.எல்.ஏ., கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
விழாவில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய சேர்மன் வாசன், ஊராட்சி தலைவர் செல்வம், பி.டி.ஓ.,க்கள் வெங்கடசுப்ரமணி, சண்முகம், முன்னாள் ஒன்றிய சேர்மன் குப்புசாமி, ஒன்றிய மாணவர் அணி மணிகண்டன், தகவல் தொழில் நுட்ப அணி தயாநிதி, ஊராட்சி தலைவர் கனகராஜ், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், கிளை செயலாளர்கள் முருகையன், சேகர், சீனுவாசன், பழனிவேல், மகளிர் அணி சுசிலா, வள்ளி, சுபஸ்ரீ, முத்துலட்சுமி, சத்யா மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.