/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் குவிந்த 682 கோரிக்கை மனுக்கள் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் குவிந்த 682 கோரிக்கை மனுக்கள்
சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் குவிந்த 682 கோரிக்கை மனுக்கள்
சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் குவிந்த 682 கோரிக்கை மனுக்கள்
சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் குவிந்த 682 கோரிக்கை மனுக்கள்
ADDED : மே 11, 2025 01:24 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் 682 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மனுக்களை பெற்று கூறியதாவது; இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அரசு வீடு போன்ற கோரிக்கைகள் அடங்கிய 682 மனுக்கள் பெறப்பட்டு, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்.
முகாமில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ஒரு காதொலி கருவி என, ரூ.2.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆர்.டி.ஓ., முருகேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மஞ்சுளா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ராஜசேகர், தாசில்தார் கனிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.