Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட பா.ம.க.,வில் பரபரப்பு

ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட பா.ம.க.,வில் பரபரப்பு

ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட பா.ம.க.,வில் பரபரப்பு

ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட பா.ம.க.,வில் பரபரப்பு

ADDED : ஜூலை 02, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம் : தைலாபுரம் தோட்டத்தில் நடந்த விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

பா.ம.க.,நிறுவனர் ராமதாசிற்கும், தற்போதுள்ள தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் சார்பில், தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் மயிலம் எம்.எல்.ஏ.,சிவக்குமார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.,வின் புதிய மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல நிறுவனர் ராமதாஸ் மூலம் நியமிக்கப்பட்ட விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.,செயலாளர் ஜெயராஜ், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடத்தினார்.

இதில் பட்டாளி தொழிற் சங்க மாநில தலைவர் முத்துக்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் பாவாடைராயன், மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை, மற்றும் திண்டிவனம், வானுார் ஆகிய சட்டசபை தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் குறித்து ஜெயராஜ் கூறியதாவது:

கூட்டத்தில் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முக்கியமாக திண்டிவனம் மற்றும் வானுார் தொகுதிகளில் பா.ம.க.,வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கவேண்டும். அதற்கான நடவடிக்கையில் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும்.மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார் தனது தொகுதியில்தான் வேலை செய்ய வேண்டும்.பக்கத்து தொகுதிகளில் வேலை செய்ய கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரத்திற்கு 6 மாவட்ட செயலாளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி, கிழக்கு மாவட்ட செயலாளராக ஜெயராஜ், வடக்கு மாவட்ட செயலாராக கனல் பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு மாற்றாக அன்புமணி சார்பில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக சிவக்குமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளராக சங்கர், மத்திய மாவட்ட செயலாளராக பாலசக்தி ஆகியோர் பதவியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us