/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூன் 12, 2025 12:22 AM

விழுப்புரம் : விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில், மழை பெய்தால், தண்ணீர் வழிந்தோடும் வடிகால் வாய்க்கால் இல்லை. இதனால் மழைநீர் முழுதும் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இச்சாலையில் மருத்துவமனை, வணிக வளாகங்கள், பள்ளி உள்ளிட்டவை உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும் உள்ளது.
மழைநீருடன், கடைகளில் இருந்து வரும் கழிவுநீரும் சேர்ந்து விடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு நோய் பரவும் அபாய நிலையும் உள்ளது.
மழைநீரில் வாகனங்களை ஓட்டி செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதுடன், ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி உள்ள கால்வாய்களை கண்டறிந்து, துார்வாறி மழைநீர் வெளியேற நிரந்தர நடவடிக்கையை எடுக்க வேண்டும்.