/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மொபட் - கார் மோதல்; விழுப்புரம் அருகே 2 பேர் பலி மொபட் - கார் மோதல்; விழுப்புரம் அருகே 2 பேர் பலி
மொபட் - கார் மோதல்; விழுப்புரம் அருகே 2 பேர் பலி
மொபட் - கார் மோதல்; விழுப்புரம் அருகே 2 பேர் பலி
மொபட் - கார் மோதல்; விழுப்புரம் அருகே 2 பேர் பலி
ADDED : ஜூன் 11, 2025 08:01 AM

விழுப்புரம்; விழுப்புரம் அருகே மொபட் - கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் பெரியார் நகரை சேர்ந்தவர் விநாயகம், 73; விவசாயி. இவர், நேற்று மாலை 5:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து வெள்ளரி விதை மூட்டையை மொபட்டில் வைத்துக் கொண்டு நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் விழுப்புரம் நோக்கிச் சென்றார்.
விழுப்புரம் அடுத்த கொளத்துார் அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த எர்டிகா கார் மொபட் மீது மோதியது.
இதில், நிலைத்தடுமாறிய கார் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், காரை ஓட்டி வந்த விழுப்புரம் மேற்கு சண்முகாபுரம் சேர்மன் சுப்புராயர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ், 52; மற்றும் அவரது தந்தையான தி.மு.க., முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜரத்தினம், 80; ஆகியோர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 7:30 மணிக்கு ராஜரத்தினம் இறந்தார்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் மூலம் காரை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.