/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்: துறை அதிகாரிகள் கணக்கெடுப்புமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்: துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்: துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்: துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்: துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு
ADDED : ஜன 10, 2024 11:11 PM

மரக்காணம்: மரக்காணம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.
இதில் குறிப்பாக மரக்காணம் பகுதிக்கு உட்பட்ட நகர், சிறுவாடி, அசப்பூர், நடுக்குப்பம், வண்டிபாளையம், புதுப்பாக்கம், ஊரணி, கந்தாடு, அனுமந்தை, கூனி மேடு, கீழ் புத்துப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் பாதிப்படைந்தது.
மரக்காணம் வட்டாரத்தில் நெற் பயிரில் 4000 ஏக்கரிலும், உளுந்து காராமணி பயிர்களில் 1200 ஏக்கரிலும், மணிலா பயிரில் 1400 ஏக்கரிலும் நீர் தேங்கியுள்ளதாக முதல் கட்டமாக அறிக்கை அளிக்கப்பட்டது.
நேற்று வருவாய்துறை அலுவலர்கள், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்து கணக்கெடுத்து வருகின்றனர்.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறுகையில்; ஆய்வின் முடிவில் பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பளவின் விபரங்களை மாவட்ட நிர்வாகம் வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு அறிக்கையாக அளிக்கப்பட்டு உரிய நிவாரணம் பெற்று விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். என கூறினார்.