/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரயில் நிலைய விரிவாக்கப்பணி: பொது மேலாளர் ஆய்வுரயில் நிலைய விரிவாக்கப்பணி: பொது மேலாளர் ஆய்வு
ரயில் நிலைய விரிவாக்கப்பணி: பொது மேலாளர் ஆய்வு
ரயில் நிலைய விரிவாக்கப்பணி: பொது மேலாளர் ஆய்வு
ரயில் நிலைய விரிவாக்கப்பணி: பொது மேலாளர் ஆய்வு
ADDED : ஜன 03, 2024 12:13 AM

விழுப்புரம் : மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரத்தில் நடைபெறும் ரயில் நிலைய விரிவாக்க பணிகளை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டம் கீழ், தமிழ கத்தில் விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்கள் மற்றும் புதுச்சேரி ரயில் நிலைய விரிவாக்கம் செய்து நவீன வசதிகளோடு தரம் உயர்த்தப்பட உள்ளது.
இந்த திட்டம் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான திட்டப் பணிகளை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி, டில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் விரிவாக்க பணிகளை நேற்று மாலை 4.00 மணிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும். பணிகளை அடிக்கடி கண்காணித்து துரிதப்படுத்த வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் அறிவுறுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் தற்போது நடக்கிறது.
இதில் ரயில் நிலையத்தை எளிதாக அணுகுதல், ஓய்வறைகள், பொது பயன்பாட்டு பகுதிகள், காத்திருப்பு கூடங்கள், நகரும் படிக்கெட்டுகள், மின் துாக்கி, உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்தும் நிலையம், தயாரிப்பு விற்பனை மையங்கள் உட்பட பல சிறப்பு அம்சங்களோடு ரயில் நிலையம் நவீனமயமாககப்படுகிறது.
இந்த பணிகள் மூலம் விழுப்புரம் ரயில் நிலையம் நவீனமாக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும்' என்றனர்.