/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
ADDED : செப் 16, 2025 06:44 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பாதாள சாக்கடை நீர் வழிவதை கண்டித்து, வார்டு மக்கள் நகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், வண்டிமேடு, வடிவேல் நகரில், சில தினங்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்து சாலைகளிலும், குடியிருப்புகளிலும் தேங்குகிறது.
புகார் தெரிவித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று மாலை நகராட்சி அலுவலகம் முன் திரண்டு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் வசந்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.